தனியா ஏதும் சாப்பிட வேண்டாம் ‘தனியா சட்னி’ உடன் சாப்பிடுங்கள்!

Published:

dhaniya 1 - 2026

தனியா சட்னி

தேவையானவை

தனியா – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
பூண்டு – 2 பல்
புளி – சிறிதளவு
கடுகு -1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/4 கப்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

dhaniya satni - 2026

வாணலியில் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற விடவும்.

ஆறியதும் தனியா, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் தனியா சட்னி தயார்.கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்க தனியா சட்னி ரெடி.

Related articles

Recent articles

spot_img