ஆரோக்கிய சமையல்: சோயா பீன்ஸ் அடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
soya - 2026

சோயா பீன்ஸ் அடை

தேவையானவை

பச்சரிசி, இட்லி அரிசி -தலா 1 கப்,
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -தலா 1/2 கப்
காய்ந்த சோயா பயறு -தலா 1/2 கப்
பாசிப்பருப்பு – 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 7
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

soya pins adai - 2026

அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளை சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல் சூடானதும் அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். அற்புதமான சுவையில் சோயா பீன்ஸ் அடை ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.