மோடி-69: கொண்டாடுகிறது டிவிட்டர் !

இந்தியா லைஃப் ஸ்டைல்
modi twitter - 2026

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் சேவை வாரமாகக் கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செப்.17 – பாரத நாட்டின் முகத்தையே மாற்றி அமைத்த மாமனிதரின் பிறந்த நாளாக கொண்டாடப் படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த தேசத்தைத் தட்டி எழுப்பி, சீர்திருத்தப் பாதையில் நடை போட வைத்திருக்கும் பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை நாட்டில் பரவலாக சேவை வாரமாக பாஜக., கொண்டாடி வருகிறது.

பிரதமர் மோடிக்கு நாட்டுமக்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது சமூக வலைத்தளக் கணக்குகளில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் சில டிரெண்ட் ஆகி வருகின்றன. #HappyBdayPMModi #happybirthdaynarendramodi #HappyBirthdayPM ஆகிய டிவிட்டர் ஹேஷ் டேக்குகளில் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.