வங்கி ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்

BANK - 2026

நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்.,26 மற்றும் 27 ஆகிய 2 நாட்களும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

26, 27 ஆகிய 2 நாட்கள் ஸ்டிரைக், அதைத் தொடர்ந்து 28,29 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடர உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கையில், செப்.,26,27 ஆகிய நாட்களில் நடக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என எச்சரித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றிற்கு ரூ.48 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.