
மணமேடையில் மணமகனால் தூக்க முயற்சிக்கப் பட்டு, பாவம்…மணமகள் குப்புறக் கவிழ்ந்ததால்… உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திருமண நிகழ்வு என்றால் சடங்குகள் சம்பிரதாய நிகழ்வுகளினூடே, கொஞ்சம் சிறியவர்கள் என்றால் விளையாட்டுகளும் களை கட்டும்தான்! இங்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை இப்போது வீடியோ கிராபர்கள் படமெடுத்துக் கொடுத்து அவ்வப்போது போட்டு உறவினர்கள் மகிழ்ந்து கொள்கின்றனர். சில திருமண நிகழ்ச்சிகள் சினிமாத்தனமாகவே படம் பிடிக்கப் படுகின்றன. ஹீரோ ஹீரோயின் கணக்காக படங்கள் விதவிதமான போஸ்களில் எடுக்கப் பட்டு, அவை ஆல்பங்களாகவும் டிவிடி.,களாகவும் இன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இங்கே ஒரு தம்பதியின் திருமண நாள், அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. இந்த மணமக்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு, பலரது வாழ்விலும் ஏற்பட்டிருக்காது, ஆனால் வெகு சிலர் வாழ்க்கையில் அமைந்து, இது போல் மறக்க முடியாத நாள் ஆகிவிடவும் கூடும்.
மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம், இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
மணமேடையில் திருமணச் சடங்கின் போது மணமகன் , மணமகளின் இடுப்பை பின்பக்கமாக இருந்து பிடிதபடி தூக்குகிறார். ஆனால் முடியவில்லை. எனவே சற்று கையை கீழே இறக்கி, பின்புறத்தைத் தாங்கியபடி மேலே தூக்குகிறார். ஆனால் சரியாக தூக்காததால், அந்தப் பெண் அப்படியே குப்புற விழுகிறார்..! மணமகனும் பேலன்ஸ் இன்றி, தள்ளிப் போய் தள்ளாடி நிற்கிறார். இது, அங்கிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



