spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதமிழக பாஜக தலைவர் நாளை அறிவிக்கப்படுமா?

தமிழக பாஜக தலைவர் நாளை அறிவிக்கப்படுமா?

- Advertisement -

தமிழக பாஜக அடுத்த தலைவர் யார் என்பது குறித்து நாளைக்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பேற்றதால் தற்போது பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது மத்தியில் பாஜக வலிமையான ஆட்சியை அமைத்துக் கொண்டு விட்டாலும், தமிழகத்தில் இன்னும் சரியான வளர்ச்சியை எட்ட முடியவில்லை. அதனால் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுபவர் கட்சியை வளப்படுத்தும் அளவுக்கு வலு உள்ளவராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..

மதுரையில் இன்று நடைபெற இருக்கும் காஷ்மீர் 370 சட்டவிதி நீக்க விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார் பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ். அவர் பாஜக தலைவர் யார் என்பது நாளைக்கே கூட அறிவிக்கப்படலாம் என சூசகமாக கூறியுள்ளார்.

இதன்மூலம் நாளை அல்லது மறுநாள் தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் தமிழக சட்டசபை இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் தொடங்க இருக்கிறது. அதற்குள் பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe