பாஜக., கோரிக்கையை ஏற்று தைப்பூசம் பொதுவிடுமுறை அறிவிப்பு: கே.பழனிசாமிக்கு எல்.முருகன் நன்றி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
murugan-edappadi-palanisamy
murugan-edappadi-palanisamy
  • இலங்கை, மலேசியாவை அடுத்து… தமிழகத்திலும் தைப்பூசம் பொதுவிடுமுறை நாளாக அறிவிப்பு!
  • தைப்பூசத் திருவிழா நாளை, பொது விடுமுறையாக அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பாஜக.,வின் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ,

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப் பயணம் சென்ற போது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜன.28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் “தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்” உத்தரவிட்டுள்ளேன்… என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசின் அறிவிப்புக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் நன்றி தெரிவித்து டிவிட்டர் பதிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.