தொழிலதிபரை மணக்க இருக்கும் பிரபல நடிகை! நிச்சயதார்த்த வைரல் புகைப்படம்!

Published:

miya4

பிரபல நடிகைக்கு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் மோதிரம் மாற்றிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். சிலர் தள்ளி வைத்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் நிதின் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

miya6

நடிகர் ராணா திருமணம் கடந்த 8 ஆம் தேதி ஐதராபாத்தில் எளிமையாக நடந்தது. மாமாங்கம் நடிகை பிராச்சி தெஹ்லான் திருமணம் தில்லியில் நடந்தது. சில மலையாள நடிகர், நடிகைகளும் இந்த லாக்டவுனில் திருமணம் செய்துகொண்டனர்.

miya1

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

miya

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
miya7

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மியா. இதில் சத்யா ஹீரோவாக நடித்தார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

miya2

இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய இருக்கிறார். லாக்டவுன் காரணமாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாலா செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

miya3

அஸ்வின் பிலிப்பும் மியாவும் மோதிரம் மாற்றும் வீடியோவை மியாவின் சகோதரி தனது யூடியூப் சேனலில் இப்போது வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
miya5

இவர்கள் திருமணம் செப்டம்பரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தேதி முடிவாகவில்லை. கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது நடத்துவது என்பது பற்றி குழப்பத்தில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் மியா கூறியிருந்தார்.

Related articles

Recent articles

spot_img