இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர்கள் அறிவிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை பொது தகவல்கள்
admk candidates - 2026

சென்னை : அக்.21 ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதிக்கு ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்! மக்களவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்ததால் திமுக வெற்றிபெற்றது… என்றார்.

candidates admk - 2026

திமுக., விக்கிரவாண்டி தொகுதிக்கும், அதிமுக., விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வரும் 27-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

விக்ரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளின் தி.மு.க தேர்தல் பணி பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக தேர்தல் பெறுப்பாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.