சாய்பாபா பிரசாதத்தில் கலந்த விஷம்! ஏமாற்றி பேராசிரியரைக் கொன்ற அலுவலக உதவியாளர்!

Published:

murder - 2026

சென்னையில் சாய்பாபா பிரசாதத்தில் விஷம் வைத்து பேராசிரியர் கொலை செய்துள்ளார் மத்திய அரசு ஊழியர் ஒருவர்!

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் பேராசிரியர் கார்த்திக். (35) ஆட்குறைப்பு காரணமாக இவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.

காசிமேட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 8 வயதில் சர்வேஷ் 6 வயதில் சர்வின் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு முல்லை நகர் பஸ் ஸ்டேண்ட் அருகே பைக்கில் மனைவியுடன் காரத்திக் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார்த்திக்குக்கு திடீரென மயக்கம் வந்து பைக்குடன் சாய்ந்து விழுந்தார். இதில் சரண்யாவும் கிழே விழுந்து காயமடைந்தார்.

Panchamirtham - 2026

அங்கிருந்தோர் இவர்களை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கார்த்திக் உயிரிழந்துவிட்டார். சரண்யாவுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மனதை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

வேலாயுதம் (43), கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில், அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார்.
கார்த்திக் 4 வருஷத்துக்கு முன்பு, வேலாயுதத்திடம் அரசு வேலைக்காக 4 லட்சம் ரூபாய் தந்ததகவும், ஆனால் அந்த பணத்தையும் வேலையையும் வேலாயுதம் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வேலாயுதம் “கவர்ன்மெட் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் வந்திருப்பதாகவும். நேரில வந்து வாங்கி செல்லுமாறும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.

kaarthik - 2026

இதனால் மகிழ்ந்த கார்த்திக், சரண்யாவை கூட்டிக் கொண்டு, வேலாயுதம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வேலாயுதம் சீரடி சாய்பாபா பிரசாதம் என்று சொல்லி, பஞ்சாமிர்தத்தை தம்பதி இருவருக்கும் சாப்பிட சொல்லி உள்ளார்.

கார்த்திக் அதை வாங்கி உடனே சாப்பிட்டுள்ளார். லேசாக மயக்கம் வரவும் தண்ணீரை குடித்து இருக்கிறார். பக்கத்தில் பிரசாதத்தை சாப்பிட போன சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிட்டு, பைக்கில் உட்கார வைத்து கொண்டு அழைத்து வந்துள்ளார்.

வரும் வழியில் மயங்கி விழுந்துள்ளார் கார்த்திக். சரண்யா இவ்வாறு சொல்லி முடித்ததையடுத்து, எம்.கே.பி நகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனர். 4 லட்சம் பணத்தை கேட்டு கார்த்திக் நச்சரித்து கொண்டே இருந்ததால்தான், லேப்-பில் இருந்த சல்ஃபூரிக் பவுடரை பிரசாதத்தில் கலந்து கொடுத்தாக வாக்குமூலம் தந்துள்ளார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Related articles

Recent articles

spot_img