பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்!

உள்ளூர் செய்திகள் சென்னை
modi 2 3 - 2026

சென்னை விமானநிலையத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சென்னைக்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். 2019 மக்களைவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளேன்.

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த என்னை வரவேற்பதற்காக தொண்டர்கள் ஆர்வத்துடன் இத்துணை பேர் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அமெரிக்க தமிழர்கள் மத்தியிலும், ஐ.நா சபையிலும் தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை குறித்து பேசினேன் தற்போது அங்குள்ள ஊடகங்களில் அந்த செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றன.

நாம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது. நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளில் பாதயாத்திரை செல்லவுள்ளோம்,
அந்த யாத்திரையின் போது காந்தியடிகளின் சித்தாந்தங்களை எடுத்து கூறவுள்ளோம். மீண்டும் ஒரு முறை என்னை வரவேற்பதற்காக வந்துள்ள உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.