தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வலுவான கூட்டணி அமையும்: அமித் ஷா நம்பிக்கை!

Published:

amitsha 1 - 2026

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும் அளவுக்கு வலுவான கூட்டணி அமைக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா!

ஈரோட்டில் நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. அப்போது அவர், பாஜக., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நீங்களும் கருத்துக் கூறலாம். பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான அணி வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க உள்ளோம். ஒவ்வொரு பிரிவினரின் தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

amitsha2 - 2026

விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்னடைவைச் சந்தித்த நெசவுத் தொழிலை, மீட்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஜவுளித்துறைக்காக மத்திய அரசு ரூ.1,230 கோடி ஒதுக்கியுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணியில்லை! அது ஊழல் கூட்டணி. ஒரு பக்கம் ஊழல் கூட்டணி உள்ளது. மறுபக்கம் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் கூட்டணி உள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

amitsha3 - 2026

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img