edappadi balakrishnareddy - 2026

சென்னை: பேருந்துகள் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி, கடந்த 1998ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசித் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி
1995-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக புகார்

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த 1991-96-ஆம் காலகட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending