திமுக., செயற்குழுவில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

Published:

26 May29 DMK - 2026

சென்னை: தி.மு.க. செயற்குழுவின் அவசரக் கூட்டம் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் திமுக., தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆக. 7ஆம் தேதி காலமானார். இந்நிலையில், திமுக.,வின் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதலாவதாக கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

முன்னதாக திமுக., செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. செயற்குழு உறுப்பினர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

மு.க.அழகிரியால் எழுந்துள்ள சூழல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது. மு.க.அழகிரியை எக்காரணம் கொண்டும் கட்சியில்  மீண்டும் சேர்க்கக் கூடாது என்று திமுக., எம்.எல்.ஏ., அன்பழகன் கருத்து தெரிவித்திருந்தார். இவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கட்சி செயற்குழுவில் மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் குறித்து விவாதிக்கப் படும் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img