மோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்!

Published:

pm modis indepenence day speech - 2026

புது தில்லி: பிரதமர் மோடி ஆக.15 நாளை வழங்கும் சுதந்திர தின உரை கூகுள், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையை வழக்கம்போல் தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை இன்னும் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நேரலை ஒளிபரப்பு கூகுளின் முகப்பு பக்கத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவை கூகுள் நேரலையாக ஒளிபரப்பியது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img