சுதந்திர தின உரைக்கு பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறார் மோடி!

இந்தியா சற்றுமுன்

06 June20 Modi - 2026

புது தில்லி: ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தான் ஆற்றவுள்ள உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, பொது மக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறலாம் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது டிவிட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தின உரை குறித்து உங்களின் கருத்துகள், எண்ணங்கள் என்ன? அதனை நரேந்திர மோடி ஆப் வழியாகவும் மைகவ் இணையம் வழியாகவும் பகிர்ந்து கொள்ளலாம். அடுத்துவரும் நாட்களில் உங்களின் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.