பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டோக்லாம் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வுஹான் நகரில் சீன பிரதமர் ஜி ஜின்பிங்-வுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
I thank President Xi Jinping for the wonderful gesture of personally accompanying me in the Hubei Provincial Museum. The Museum is home to great facets of Chinese history and culture. pic.twitter.com/Dtp1uc7NLz
— Narendra Modi (@narendramodi) April 27, 2018
வரும் 2019-ஆம் ஆண்டு இதுபோன்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் குறிப்பிட்டபோது சீன அதிபரும் மகிழ்ச்சியுடன் இந்தக் கருத்தை ஆமோதித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் நாம் நிறைய சாதித்துள்ளோம். பலமுறை நாம் சந்தித்துள்ளோம். உங்களுடன் மேலும் ஆழ்ந்த தொடர்பை வளர்ப்பதன் மூலம் இந்தியா-சீனா இடையிலான நட்புறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான புரிதலை நாம் ஏற்படுத்திகொள்ள முடியும் என ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரதமரின் சீன பயணம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது…
திட்டமில்லாத சீன பயணத்தின் நேரலையை டிவியில் பார்த்தேன். நீங்கள் பதற்றமாக உள்ளீர்கள். உங்கள் நினைவிற்காக.. 1. டோக்லம் 2. சீனா பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்த முக்கியமான பிரச்னைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.
Dear PM,
Saw the live TV feed of your “No Agenda” China visit.
You look tense!
A quick reminder:
1. DOKLAM
2. China Pakistan Eco Corridor passes through POK. That’s Indian territory.India wants to hear you talk about these crucial issues.
You have our support.
— Rahul Gandhi (@RahulGandhi) April 27, 2018
ராகுலின் இந்த டிவிட்டர் பதிவுக்கு பலத்த விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். யார் பதட்டத்தில் உள்ளனர் என்பது குறித்து கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.




