
‘அந்த’ வீடியோக்களும் அமமுக.,வும்! அது நான் இல்லை.. நாஞ்சில் சம்பத் அலறல்…
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். மதிமுக.,வில் வைகோவின் வலதுகரமாகவும், திராவிட கொள்கைகளில் பிரசார பீரங்கியாகவும் இருந்தார்.
ஜெயலலிதா முன்னிலையில் பின்னாளில் மதிமுகவில் இருந்து விலகி அதிமுக பக்கம் சாய்ந்தார் அப்போது அவருக்கு இனோவா கார் பரிசளிக்கப்பட்டது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் அவரை இன்னோவா சம்பத் என்று அழைத்தார்கள் பின்னர் டிடிவி தினகரன் பின்னால் சென்றார். அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியதும் பிரச்னை உருவானது.
கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என்றும் திராவிடம் இல்லாத இடத்தில் நாஞ்சில் சம்பத் இருக்கமாட்டான் என்றும் கூறிவிட்டு வெளியில் வந்தார்
இப்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார்.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது.
அதில், ஓர் இளம் பெண்ணுடன் மது குடிப்பது போன்றும், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் வருகிறது. சுமார் ஒரு நிமிடத்துக்கு மேல் ஓடும் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
ஏற்கனவே அமமுகவில் இருப்பவர்கள் இருந்தவர்கள் இருந்து வெளியில் வந்தவர்கள் குறித்து ஆடியோ களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம் அந்த கட்சியில் தினகரனுடன் இருந்தவர்கள் குறித்த ரகசியங்கள் இரகசிய பேச்சுக்கள் இவற்றை ரகசியமாக படம் எடுத்து வைத்து அதை வெளியிடுவது போல் மிரட்டி உள்ளடி அரசியல் செய்கிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வருகிறது
முன்னர் புகழேந்தி இதுபோல் மாட்டிக்கொண்டார் அமமுகவில் இருந்த சிலரும் இதுபோல் வீடியோ வெளியாகி கொஞ்சம் கொல்லப்பட்டனர். இப்போது நாஞ்சில்சம்பத் பக்கம் அந்தக் காற்று வீசி இருக்கிறது
இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டதற்கு, “நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. நண்பர்கள் சொன்னார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. யாரு வீடியோவை போட்டான்னு தேடுறதுக்கும் நான் தயாரில்லை.
புலி வேட்டைக்குப் புறப்பட்டிருக்கிறவன், எலிகளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. யார் தூண்டிவிட்டு யார் செய்தார்கள் என்றும் நான் யோசிக்கல. என்னுடைய மனசாட்சி கிளியராக இருக்கிறது. எந்தவிதமான தவறுகளுக்கும் என் வாழ்க்கையில இடமில்ல. என்னுடைய பயணம் தொடருகிறது” என்றார்.
ஆனாலும் நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து விலகப் போகிறேன் இனி இலக்கியம் தான் என் பயணம் என்று விரக்தியுடன் பேசிய அளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் மக்களுக்கு புரிகிறது



