
சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வரவேற்புக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்கள் கருதி, சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் தங்கியிருக்கும் சீன அதிபர், சாலை மார்கமாக இவ்வழியில்தான் மாமல்லபுரம் செல்ல வேண்டும். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணமாக, இவ்வழியில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



