அருள்புரிவாய் கலைவாணியே!

ஆன்மிகச் செய்திகள் கவிதைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
saraswathi pooja - 2026

கலைகளுக்கெல்லாம் அரசியே,
கலைமகளே,
எங்கள் காக்க
வேண்டும்.

சகலகலா வல்லியே,
எங்கள் சங்கடங்களைத்
தீர்க்க வேண்டும்.
சாவித்ரியே,
எங்களுக்கு தைரியத்தை
அளிக்க வேண்டும்.

ஞானத்தின் நாயகியே,
எங்களுக்கு நல்லறிவை
கொடுக்க வேண்டும்.
ஞாலத்தைக் காப்பவளே,
ஞாலத்திற்கு
வழிகாட்ட வேண்டும்.

தயாவில் சிறந்தவளே,
எங்களுக்கு நல்குணத்தை
அருள வேண்டும்.
தூயாளே,
தூய்மை மனதை தந்தருள வேண்டும்.

நான்முகனின் நாயகியே,
எங்களுக்கு நல்முறையில்
பழக ஆசியளிக்க வேண்டும்.
நாமகளே!
எங்களுக்கு
நற்சொற்களை பேச அருள வேண்டும்.

பாமுதல்வியே,
எங்களுக்குப் பணிவை
கற்றுத்தர வேண்டும்.
புகழுடைய தேவியே,
எங்களுக்கு பண்பைப்
புகட்ட வேண்டும்.

ஆதிகாரணியே,
நல் ஆரோக்கியத்தை
எங்களுக்கு அருள வேண்டும்.
பூரவாகினியே,
எங்களுக்கு பொறுமை
அளிக்க வேண்டும்.

காயத்ரியே, சாரதாவே, வெண்டாமரையாளே,
ஞானக்கொழுந்தே, வாணியே, பனுவலாட்டியே,
பாரதயே, ஞான அமிலியே…

உன் அருளால்
பெரியோரை மதிக்கவும்,
எங்கள் தலைமுறையினருக்கு உதவவும்,
அடுத்த தலைமுறையைப் புரிந்துக் கொள்ளவும்,
எதிர்மறை குணங்களை,
நேர்மறை எண்ணங்களினால் துடைத்தெறிய
எங்களுக்கு அருள்
புரிய வேண்டும், கலைவாணியே!

  • ஜெயஸ்ரீ எம் சாரி, ( நாக்பூர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.