தென் கொரிய தலைநகர் சியோலில் பொருட்களை திருடிய போது 2 பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பிடிபட்டதாகவும் அந்நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென் கொரியாவின் Yongsan மாவட்டத்தில் உள்ள Itaewon பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்ற குறிப்பிட்ட பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்களும் 10 அமெரிக்க டாலர் மற்றும் 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2 பொருட்களை திருடி சென்றதாக யோங்சன் காவல் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ஊழியர்கள் திருடி சென்ற இரு பொருட்களை பற்றிய தகவல்களையும் தென்கொரிய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி சாக்லேட்கள் மற்றும் ஒரு தொப்பியை ஒன்றரை மாத இடைவெளியில் இருவரும் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட் ட்ரீட்ஸ்களையும், தொடர்ந்து பிப்ரவரி 23 அன்று 10 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொப்பி ஒன்றையும் திருடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடையில் இருந்து தொப்பி திருடப்பட்ட பின், கடை ஊழியர் ஒருவர் தொப்பி இல்லாததை கண்டு உடனடியாக சிறிது நேரத்திலேயே போலீஸாரை அழைத்து புகார் தெரிவித்தார்.
எனினும் தூதரக நல்லுறவை பேணும் விதமாக தென் கொரிய அதிகாரிகள் இந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர்.