தலை வலி என்று கூறிய பெண்ணிற்கு வார்டு பாய் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது.
பெண் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள கொரானா சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிகபட்டிருந்தார்.
அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பல கொரானா நோயாளிகள் பலர் இருந்த காரணத்தால் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒன்றாக ஒரே அறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கொரொனோவால் பாதிகப்பட்ட அந்த பெண்ணை அந்த வார்டில் இருந்த 36 வயதான வார்ட் பாய் ஒருவர் PPE கிட் அணிந்த படி, நோட்டமிட்டு அடிக்கடி அந்த பெண்ணையே சுற்றி வந்துள்ளார்.
அப்போது சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் இரவு நேரத்தில் தனக்கு அதிகமாக தலைவலி இருப்பதாகவும் இதனால் தன்னால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அந்த அட்டெண்டெரிடம் கூறியுள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அந்த நபர் உடனே அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கியுள்ளார்.
அப்பொழுது அந்த பெண் நிம்மதியாக தூங்க ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு, தான் அணிந்திருந்த சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.
இவர் தன்னால் கத்த முடியாமல் தவித்துள்ளார், அதே சமயம், அந்த வார்டுக்குள் இருந்த மற்ற நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில், மயங்கி இருந்ததாலும் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை.
பின்னர், அந்த பெண் நடந்த சம்பவத்தை குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வார்டு பாய் மீது புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, போலீசார் அவர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு தற்போது கைது செய்துள்ளனர்.