December 8, 2024, 6:01 AM
24.8 C
Chennai

மே 2 – உலக சிரிப்பு தினம்!

world laughter day
world laughter day

சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற திரைப்படப் பாடலைக் கேட்டுள்ளோம். மன மகிழ்ச்சி சிரிப்பாக வெளிப்பட்டு நம்மையும் சுற்றுப்புறத்தையும் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. நேர்மறை உணர்வையும், நட்பையும் ஏற்படுத்துவதால் சிரிப்பு ஒரு உலக மொழி என்று கூறப்படுகிறது.

உலக சிரிப்பு தினம்  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே இரண்டாம் தேதி சிரிப்பு தினம்.

1998ல் டாக்டர் மதன் கடாரியா என்பவர் மும்பையில் முதன்முதலாக சிரிப்பு தினத்தை தொடங்கி வைத்தார். அது மிக விரைவில் உலகெங்கும் புகழ் அடைந்து சிரிப்பு யோகா என்பதாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதில் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிரிப்பு கிளப்புகளுக்கு மேல் பங்கு பெறுகின்றன.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். மனம் விட்டுச் சிரித்தால் முகத்தில் உள்ள தசைகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் மிகவும் நன்மை விளையும். நேர்மறையான எண்ணமும்  உல்லாசமும் ஏற்படும். அனைவரும் தினமும் யோகாப்பியாசத்தில் ஒரு பாகமாக ஐந்து நிமிடங்கள் நிறுத்தாமல் சத்தமாக சிரிக்க வேண்டும். இதனால் மனிதர்களுக்கிடையே மட்டுமின்றி நாடுகளுக்கு இடையே கூட நல்லெண்ணமும் நட்பும் ஏற்படும் என்று மதன் கடாரியா கூறுகிறார். 

“சிரிக்க வைப்பது ஒரு யோகம். சிரிப்பது ஒரு போகம். சிரிக்காமல் இருப்பது ஒரு ரோகம்” என்று ஒரு பாடல் உள்ளது. சிரிக்கா விட்டால் நோய்கள் வரும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் மதன் கடாரியா.

ALSO READ:  ‘கருத்துப் புயல்’ கஸ்தூரி; கழகக் கண்மினிகள் ‘கார்னர்’ செய்யும் ஒற்றைத் தாக்குதலில்!

உடல் முழுவதும் குலுங்கும்படி சத்தமாக சிரிப்பதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தற்போது மருத்துவர்கள் டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நோயாளிகளுக்கு சிரிப்பு தெரபியை பரிந்துரைக்கிறார்கள்.

உலக சிரிப்பு தினத்தில் பங்கு பெறுவோர் தினமும் கட்டாயம் ஒரு முறையாவது வாய் விட்டுச் சிரிப்பதாக சபதம் ஏற்கிறார்கள்.

2000 ஆண்டில் உலக சிரிப்பு தினத்தில் டென்மார்க் கோபென்ஹெகன் டவுன் ஹால் ஸ்கொயரில் பத்தாயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி சிரித்து மகிழ்ந்தார்கள். அந்த நிகழ்வு கின்ன்ஸ் சாதனையாக பதிவில் ஏறியது.

வலியை மறக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தம் தீரவும், தசைகளுக்கு உடற்பயிற்சி கிடைக்கவும், வாய்விட்டு சிரிப்பது நல்ல மருந்து. தற்போது எந்த பார்க்கில் பார்த்தாலும் வாக்கிங், ஜாகிங், யோகாப்பியாசம் செய்பவர்களோடு கூட ஹாஸ்ய யோகா செய்பவர்களும் தென்படுகிறார்கள். சிரிப்பு கிளப்கள் பல நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

காலையில் தூங்கி எழுந்தது முதல் பல பிரச்சினைகள்,  கவலைகள், நோய்கள், பொருளாதார அழுத்தங்கள். இவற்றுக்கு இடையில் நசுங்கும் மனிதனுக்கு சிரிப்பு ஒரு தென்றல் காற்றாக வீசி அனைவரையும் மகிழ்விக்கிறது.

குலம், மதம், ஆண், பெண், வயது, வரம்பு எதுவும் இன்றி அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக சிரிக்க முடிந்தால் உலகம் ஒரு குடும்பம் என்ற வார்த்தையில் உள்ள உண்மை விளங்கும்.

ALSO READ:  நீ…. உன்னை அறி! உள்ளம் தெளிவடையும்!

உன் மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள். உன் துயரத்தை தனியாக அனுபவி என்று ஒரு பழமொழி கூட உள்ளது.

சிலருக்கு மனதின் எண்ணத்தை வெளியிடாமல் சிரிப்பு மறைந்து விடுகிறது. ஆனால் அத்தகைய சிரிப்பில் நேர்மை இல்லாததால் விரைவில் பிடிபட்டு போவார்கள். அதனால் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவரையும் நம்பிவிட முடியாது. துரியோதனன் திரௌபதி சிரித்ததைப் பார்த்து எரிச்சலடைந்தான். அதுதான் மகாபாரதப் போருக்கு காரணம் என்பார்கள்.

சிரிக்கக் கூடிய ஒரே விலங்கு மனிதன்தான். இரண்டு பேர் சேர்ந்து உரையாடல் தொடங்குமுன் புன்சிரிப்போடு இருந்துவிட்டால் கோபத்தோடு வந்தவர் கூட தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு நட்போடு பழக ஆரம்பித்து விடுவார்.

சிரிப்புக்குக் கூட ஒரு தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது மனிதன் எவ்வளவு தூரம் சிரிப்பில் இருந்து தொலைவில் விலகி விட்டான் என்பதை அறியமுடிகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிரிப்பு தின கொண்டாட்டங்கள் இணையம் மூலம் நடத்தப் படுகின்றன. சிரிப்பின் மூலம் ஆரோக்கியம், ஆனந்தம், உலக அமைதி இவற்றைப் பெறும் வாய்ப்பு இருப்பதால் சிரிப்புதினம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று..

  • ராஜி ரகுநாதன்
ALSO READ:  உபதேச பலன் எப்போது கிடைக்கும்?
author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week