கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி சிறுவன் பொதுமக்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை இலவசமாக வழங்கினார்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஷர்வேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டுவரும் இந்த சிறுவன் இன்று கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதேபோல அதிக மருத்துவ குணம் கொண்ட துளசி செடி,திருநீற்று பச்சிலை, கருந்துளசி, தூதுவளை செடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.