இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாக இணையதளங்களில் பரவும் வைரல் வீடியோ!

இந்தியா சற்றுமுன்

Imran - 2026

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் பிடிஐ கட்சியின் நிறுவுனருமான இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

குண்டடி பட்டு காயமடைந்த நிலையில் இருக்கும் அவரை தூக்கிக் கொண்டு பாதுகாவலர்கள் ஓடுவதாக அந்த வீடியோ பதிவில் கூறப்பட்டிருந்தது. இது நேற்று முதல் பல இடங்களிலும் வைரலாகப் பரவியது. பின்னர் அது போலி என்று அறிந்ததும், அந்தச் சம்பவம் 2013ல் சாதாரண ஒரு விபத்தின் போது, அவரை தூக்கிச் செல்லும் காட்சி என்றும், அதன் பின்னர் அவர் குணமடைந்து வந்தார் என்றும் மறுப்புச் செய்தியையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று காலை முதல், இம்ரான் கான் சுட்டுக் கொல்லப் பட்டதாக வந்த செய்தி உண்மையா என்றும் பலருக்கு வாட்ஸ் அப் வயிலாக கேள்விகளைக் கேட்டவர்கள் அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.