
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரியசெல்வம்(52).
இவர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை. இவரது கணவர் இறந்துவிட்டார்.
நேற்றுமுன்தினம் மாலை அவரது வீட்டுக்குள் திடீரென கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மரியசெல்வம் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்துக்கு வீட்டில் சென்று தூங்கியுள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே இருந்த பீரோவை உடைத்து 60பவுன் நகைகள், சம்பளபணம் 45 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவா்கள் கூறியதாவது
மரியசெல்வம் தனியாக இருப்பதை கவனித்த மர்ம நபர்கள் அவரை பயமுறுத்த வீட்டுக்குள் பாம்பை துாக்கி போட்டு விட்டு அவர் பயந்து பக்கத்து வீட்டில் தங்கியதை அறிந்து பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனா்.
இந்த நுாதனமான திருட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகாரின்படி மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



