
அசுரன் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்குமாறு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபலம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த நடிகர் தனுஷின் அசுரன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிசில் சரியான வசூல் ஏற்படுத்தி வருகிறது.
அது முதல் இரண்டு நாட்களில் மட்டும் 10 கோடி ருபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது என பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஆண்டபரம்பரை என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
. “ஆண்டபரம்பரை நாங்கதான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



