கேரள மாநில பாஜக துணைத் தலைவரானார் அப்துல்லா குட்டி!

இந்தியா சற்றுமுன்
abdulla kutti - 2026

கேரள மாநிலத்துக்கு கட்சியின் துணைத் தலைவராக இஸ்லாமியரான அப்துல்லா குட்டியை நியமித்துள்ளது பாஜக.,!

கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கமான எஸ் எஃப் ஐ #SFI வழியாக அரசியல் பிரவேசம் செய்தவர் அப்துல்லா குட்டி. கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியாகவும் காங்கிரசில் சேர்ந்து பின்னர் எம்எல்ஏ ஆகவும் இருந்தவர்.

அண்மையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடியைப் புகழ்ந்து கருத்து தெரிவித்தார். இதனால், காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் இவர் கடந்த ஜுன் மாதம் பாஜக.,வில் இணைந்தார். பாஜக.,வில் இணைந்த போதே, இவர் மூலம் கேரளத்தில் பாஜக., வளர்ச்சி அடைவதற்கு தேவையான முயற்சிகளை கட்சி மேலிடம் மேற்கொள்ளும் என்றும், அதனால் கட்சியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப் படும் என்றும் பேசப் பட்டது.

jbnaddaa abdullakutti - 2026

அதற்கு ஏற்ப, அவர் கட்சியில் இணைந்து நான்கு மாதங்கள் கடப்பதற்குள், தற்போது பாஜக.,வின் துணை தலைவர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நம் நாட்டின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராக வசிக்கும் மாநிலம் கேரளம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம். மேலும், பாஜக., மீதான வெறுப்பு உணர்வு அதிகம் விதைக்கப்பட்டுள்ள மாநிலம் கேரளம்.

இந்நிலையில், இவரது நியமனம் பாஜக.,விற்கு பலம் சேர்க்கும் என்று அம்மாநில பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.