அவரின் முதல் மனைவியைப் பிரித்து விடவில்லை: மனம் திறந்த ஹேமமாலினி!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
hemamalini dharmendra - 2026

அவருடைய முதல் மனைவியை விலக்கி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

கனவுக்கன்னியும் அந்நாள் நடிகையுமான ஹேமமாலினி நேரடியாக பளிச்சென்று பேசும் சுபாவம் கொண்டவர். அண்மையில் அவர் தன் 71-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கணவர் தர்மேந்திரா பற்றியும் சுவையான செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

என் பிறந்த நாளுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ய தேவையே இல்லை. நான் இன்னும் இளமையாக மாறப்போவதில்லை. என் வயதில் இன்னொரு எண்ணிக்கை கூடுகிறது. வயது அதிகமாகும்போது பிறந்த நாள் கொண்டாடுவதில் ஆசை குறைந்து விடுகிறது.

என் பிறந்தநாளை முன்னிட்டு என் மதுரா தொகுதி மக்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விழைகிறேன். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நான் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விடுவேன். அதன்பின் அரசியலுக்கு குட்பை சொல்லப் போகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தினருடன் சேர்ந்து நேரம் கழிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான டான்ஸ் மீது அதிகம் ஃபோகஸ் செய்யப் போகிறேன்.

hema malini - 2026

இனி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூற வேண்டுமென்றால்…. நான் தர்மேந்திராவை முதன் முதலில் பார்த்த உடனே இவர்தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த விஷயம் தெரியும்.

ஆனால் என் வாழ்க்கையை அவருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் திருமணம் பிறர் வாழ்க்கையைக் கெடுக்க கூடாது என்று நினைத்தேன்.

அவருடைய முதல் மனைவி குழந்தைகளுக்கு அநியாயம் நேர விடவில்லை. நான் அவரை மணம் புரிந்து கொண்டேனே தவிர அவரிடமிருந்து முதல் மனைவியை பிரிக்கவில்லை… என்று தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.