பள்ளிகளில் இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் 10 நிமிடம் தண்ணீர் குடிக்க இடைவேளை!

உள்ளூர் செய்திகள் கல்வி கோவை சற்றுமுன் நலவாழ்வு
SENGOTTAIAN - 2026

பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும், அமைச்சர் செங்கோட்டையன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் குடிநீர் அருந்திக் கொள்ள ஏதுவாக நேரம் ஒதுக்க அரசு ஆணை பிறப்பிக்கவுள்ளது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.