
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 32 மாவட்டங்களுடன் புதிதாக 5 மாவட்டங்கள் இணைகின்றன. நெல்லையைப் பிரித்து தென்காசி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு ஆகிய புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அதிகாரிகள் (டி.ஆர்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,
தென்காரி- கல்பனா
கள்ளக்குறிச்சி -சங்கீதா,
செங்கல்பட்டு-ப்ரியா,
திருப்பத்தூர்-தங்கையா ,
ராணிப்பேட்டை – ஜெயச்சந்திரன் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.