“பிராணன் போனதை நீ பார்த்தாயா? “-பெரியவா

ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை

“பிராணன் போனதை நீ பார்த்தாயா? “-பெரியவா

( ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே! எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு பெரியவாளின் பதில் மேலே)

சொன்னவர்-திரு கணேச சர்மா

டாக்டர்: ஸ்வாமி, நான் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஆனால் தாங்கள் கூறும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே! எப்படி நம்புவது?

பெரியவா: ஒன்று கேட்கிறேன். பதில் சொல். நீ செய்த அறுவை சிகிச்சைகளில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். சிலர் மரணம் அடைந்தும் இருக்கலாம். மரணம் அடைந்ததும் நீ என்ன சொல்வாய்?

டாக்டர்: என்ன செய்வது? பிராணன் போய்விட்டது. அவ்வளவுதான். என்று சொல்லுவேன்.

பெரியவா: பிறகு?

டாக்டர்: இன்னாரின் பிராணன் போய்விட்டது என்று மரணச் சான்றிதழ் கொடுப்பேன்.

பெரியவா: பிராணன் போனதை நீ பார்த்தாயா? சரி. அறுவை சிகிச்சை செய்யும்போது பிராணன் இருந்ததை நிச்சயம் சொல்லமுடியுமா? பார்க்காத ஒன்றைப் பற்றி பிராணன் போய்விட்டது என்று நீ சான்றிதழ் கொடுப்பது பொய்தானே? அது போலத்தான் ஜீவத்மாவும் பரமாத்மாவும். கண்ணுக்குப் புலனாகதவை. அதனால் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?

டாக்டர்: பேசாமலேயே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டுப் போனார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.