முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kcr telangana - 2026

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! – என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி – கூறியுள்ளது.

ஜஸ்டிஸ் ஃபர் திசா பெயரில் ஹைதராபாத்தில் ஏபிவிபி மிகப்பெரிய ஊர்வலம் நடத்தியது. குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தெலங்காணா முதல்வர் மீது விமர்சனங்களை அள்ளிக் கொட்டினர். சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திசா கொலைக்கு எதிராக ஏபிவிபி ஹைதராபாத்தில் மிகப்பெரிய ராலி நடத்தியது. அதில் பெருமளவில் மாணவர்கள் பங்குகொண்டனர்.

abvp hyderabad protest - 2026

திங்களன்று டிசம்பர் 2 மதியம் இந்திரா பார்க் வரை ஊர்வலம் சென்றனர். தாமதிக்காமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். திசாவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் நிற்காது என்று ஏபிவிபி தலைவர்கள் தெளிவாக எடுத்துக் கூறினார்.

கொலை சம்பவம் தொடர்பாக தெலங்காணா உள்துறை அமைச்சர் முகம்மது முகம்மது அலி கூறிய கருத்துக்கள் குறித்து ஆத்திரம் அடைந்தனர். தன் சகோதரிக்கு போன் செய்ததற்கு பதில் 100-க்கு போன்செய்து இருக்கவேண்டும் என்று அவர் கூறிய கருத்து வெட்கக்கேடு என்றனர்.

பெற்றோர் புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் தம் எல்லைக்குள் வராது என்று கூறி விரட்டியதைக் கொண்டே போலீசார் எந்த அழகில் வேலை செய்கிறார்கள் என்பது புரிகிறது என்று விமர்சனம் செய்தனர்.

முதல்வர் கேசிஆர் மீது ஏபிவிபி தலைவர்கள் எரிந்து விழுந்தனர். சந்திரசேகர ஆசாத் போன்ற பெயரை வைத்துக் கொண்டுள்ள கேசிஆர் மக்களுக்கு நியாயம் செய்ய இயலாமல் இருக்கிறார். உடனே அவர் தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஏளனம் செய்தனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று உறுதியாகக் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.