உள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
nellai dt collector - 2026

உள்ளாட்சி தேர்தல் ரத்து: மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம் வழக்கம் போல் நடைபெறும்:
நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்!’

மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்…

மாநில தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடத்துவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் டிசம்பர் 2 முற்பகல் முதல் அமலில் இருந்தது.

தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்படி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், வருவாய்த் துறையினரால் நடத்தப்பெறும் மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம் ஓய்வு ஊதிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.