பாவம்..! ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்!

Published:

boy acid school tutikudi - 2026

கோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் … ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். இவரது மகன் பிரமோத் பாலா (12)

boy acid school tutikudi1 - 2026

இடையர்காடு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் டிஎன்டிஏ குட் ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

பிரமோத் பாலாவை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யக் கூறியுள்ளார் வகுப்பாசிரியர். அவன் கழிவறையை சுத்தம் செய்யும்போது, பிரமோத் பாலாவின் இடது கையில் ஆசிட் கொட்டியத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவனை அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவனை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யுமாறு கூறிய ஆசிரியர், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
https://twitter.com/vanamadevi/status/1202934779923927040

[poll id = “28”]

Related articles

Recent articles

spot_img