புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டடங்கள்! முதல்வர் உத்தரவு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
edappadi palanisamy 5 - 2026

ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

செங்கல்பட்டு, திருச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் தற்போது உதயமாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தலா 100 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான இடம் தேர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் அறை, கூட்ட அரங்கு, குறைதீர் கூட்ட அறைகள் உள்ளிட்டவை அமைய உள்ளன.

இது மட்டுமன்றி வேளாண்மை தோட்டக்கலை, வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சி சத்துணவு உள்ளிட்ட துறைகளுக்கான அலுவலகங்களையும் ஏற்படுத்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.