பலமுறை பாலியல் வன்கொடுமை! மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

Published:

rape - 2026

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் பெண்மணி ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் சமீபத்தில் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், தனது மகன் தன்னை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்மணி கூறும்போது, ‘எனது கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் குடிப்பதற்கு என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.

பணம் தர மறுத்தால் அடித்து துன்புறுத்துவார். எனக்கு மேலும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஒரு கட்டத்தில் என்னை பாலியல் ரீதியாக பலமுறை துன்புறுத்தியுள்ளான்.

மேலும், இதுகுறித்து யாரிடமும் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினான்’ என்று புகார் தெரிவித்துள்ளார். தற்போது காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Related articles

Recent articles

spot_img