மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
sivakarthi 1 - 2026

அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை… மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் திரையுலகில் அறிமுகமான புதிதில் நகைச்சுவைப் படங்களில் அதிகம் நடித்து வந்தார். அவருக்கு அதனால்தான் சிறுவர்கள் முதல் பலரும் ரசிகர்களானார்கள்.

குறிப்பாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய நகைச்சுவை படங்கள் சிவகார்த்திகேயனுக்கு பெரிதும் கை கொடுத்தன.

இந்தப் படங்களில் பெற்ற வெற்றியால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்தது. பின்னர், வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் அதிரடி வேடங்களில் தலைகாட்டினார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை.

இதையடுத்து விக்னேஷ் சிவன் மற்றும் நெல்சன் ஆகியோர் இயக்கும் புதிய படங்களில் மீண்டும் முழுமையான நகைச்சுவை காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் தயாராகிவிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.