தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: வேப்பம் பூ பச்சடி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Neem flower tart - 2026

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ – 1 கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 3
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வேப்பம்பூ போட்டு மிதமான தீயில் கருஞ்சிவப்பாக வறுத்துக் கையால் நொறுக்கிப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.

உப்பு போட்டு நன்கு கொதித்ததும் வெல்லம் போட்டுக் கிளறவும். இறுதியில் வெல்லம் கரைந்ததும் அதில் வேப்பம் பூவை கொட்டி கிளரவும். பின்னர் பச்சடி கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.