
உலகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை விதித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உலகம் முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு சென்று இறைவனை வழிப்பட்டு 2021-ம் ஆண்டை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகாலை முதலே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். திரளான பொதுமக்கள் பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பூஜைகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.