சிபிஎஸ்இ: 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து! 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு!

இந்தியா கல்வி சற்றுமுன்
school-1
school-1

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனவும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மே 4-ம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன் 1-ல் ஆய்வு நடத்திய பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.