December 7, 2025, 3:04 AM
24.5 C
Chennai

அ.தி.மு.க சொத்து பட்டியல்- வெளியானால் எதிர்கொள்ள தயார்-ஜெயக்குமார்

500x300 1866420 jayakumar - 2025
#image_title

அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டால் எதிர்கொள்ள தயார் என அதிமுக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது என கூறியுள்ளார்.

திருவொற்றியூரில் 18 இடங்களில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் போன்றவற்றை வழங்கினார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊழலிலே திளைத்த கட்சி தி.மு.க. என்று உலகத்திற்கே தெரியும். தி.மு.க.விற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தி.மு.க.வினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இந்த 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம். அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம். ஆனால் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும்.

அதன் பின்னர் எங்களுடைய செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள். அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு போலீசாரும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவாயில்லை என் குழந்தையின் கால் போய் விட்டது, யார் மேல் ந வடிக்கை எடுப்பது என்று போராடுகிறார்.

இந்த 2 வருடங்களில் போலீசாருக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள். காவல்துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories