டி.ஆர் பாலுவிற்கு கொரோனா!

Published:

t r balu dayanidhi maran

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா சுட்டுரையில் தெரிவித்தது,
“எனது தந்தை டி.ஆர்.பாலு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

கடந்த வாரம் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img