பச்சை தேயிலை கொட்டகைக்குள் ஒதுங்கிய சிறுமிகள்! நேர்ந்த விபரீதம்!

சற்றுமுன் தமிழகம்
karthika
karthika

மின்னல் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டாடு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் தனது மனைவி புனிதா மற்றும் மகள் ஜீவப்பிரியா போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமகிருஷ்ணன், ரஞ்சித்குமார், ஆனந்தஜோதி மற்றும் புனிதா ஆகிய நான்கு பேரும் தோட்டத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து தங்களது பெற்றோர்களுக்கு உணவு கொடுப்பதற்காக கார்த்திகாவும், ஜீவப்பிரியாவும் இணைந்து சென்றுள்ளனர்.

அந்த சமயம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் இந்த சிறுமிகள் பச்சைத் தேயிலையை பாதுகாத்து வைக்கும் கொட்டகைக்குள் சென்றுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அப்போது திடீரென இந்த சிறுமிகளை மின்னல் தாக்கியதால் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சேரம்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சிறுமிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கார்த்திகா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனையடுத்து ஜீவப்பிரியாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.