பல்கலை., கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்
10 June30 Madras universeity - 2026

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை டிச.21 முதல், வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயர்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டும், டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டும், மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாகவும், நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.