கலர் ஃபுல்லா ஒரு சாதம்! செஞ்சு கலக்குங்க!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
capsicum - 2026

குடைமிளகாய் சாதம்

தேவையானவை
குடமிளகாய் – 2
வெங்காயம் – 2
கரம் மசாலா – சிறிதளவு
கடலைப் பருப்பு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
வடித்த சாதம் – 1 டம்ளர் அரிசியில் செய்தது
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்

செய்முறை :

caosucum rice - 2026

முதலில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு அது வெடித்ததும் கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். வறுபட்டதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்புஉப்பு, சாம்பார்ப் பொடி, கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் தேங்காய்த் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இதில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சுவையான குடமிளகாய் சாதம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.