தீபாவளி பலகாரம்: முள்ளு முறுக்கு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mulu murukku - 2026

முள்ளு முறுக்கு

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி – 3 கப்,
கடலைப் பருப்பு – 1 கப்,
பயத்தம் பருப்பு – 1/4 கப்,
எள் தேய்த்து காய்ந்தது – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் – சிறிதளவு,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை:

சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.

முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.  மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.