ஆரோக்கிய சமையல்: பைனாப்பிள் கொத்சு!

Published:

pineapple - 2026

பைனாப்பிள் கொத்சு

தேவையானவை:

அன்னாசிப்பழத் துண்டுகள் – ஒரு கப்,

புளி – நெல்லிக்காய் அளவு,

வெல்லம் – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – 4,

தேங்காய் துருவல், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

எள் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுந்து, வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் அன்னாசிபழத் துண்டு களைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

இதனுடன் புளிக் கரைசலை சேர்த்து… உப்பு, வெல்லம், அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img