போர்ப்ஸ் வெளியிட்டது போலித் தகவல்: கங்கனா சகோதரி!

சினி நியூஸ் சினிமா
kangana 1 - 2026

அமெரிக்க இதழ் போர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் அதிக சம்பளம் பெறும் நடிகர், நடிகையர் தொழில் அதிபர்கள் பெயர்களை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் முதலிடத்தில் கோஹ்லியும், 2வது இடத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ரஜினி 13வது இடம், விஜய் 47, அஜித் 52, ஷங்கர் 55, கமல்ஹாசன் 56, தனுஷ் 64வது இடத்திலும் இருந்தனர்.

நடிகை கங்கனா ரனாவத் 17.5 கோடி வருவாயுடன் 70வது இடத்தைப் பிடித்ததாக பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இதுபற்றி கங்கனாவின் அக்கா ரங்கோலி விளக்கம் கேட்டிருக்கிறார். ‘இந்த ஆண்டில் கங்கனாவின் வருமானம் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது.

அவரது வருமான கணக்கை பராமரிக்கும் அக்கவுண்டன்ட் குழுவுக்கும், எனக்கு மட்டுமே தெரியும்.

அது மிகவும் ரகசியம். அதனை பிறகு கங்கனாவுக்கு தெரிவிப்போம். ஆனால் போர்ப்ஸ் இதழுக்கு வருமான விவரங்கள் எப்படி கிடைக்கிறது. கங்கனாவின் வருமானம் பற்றி பட்டியலில் வெளியிட்ட தொகையை காட்டிலும் அதிகமாக வருமான வரி கட்டியிருக்கிறார்.

இதுவொரு போலியான பட்டியல். எந்த விவரங்களை வைத்து இவ்வளவுதான் வருமானம் என பட்டியலிடுகிறீர்கள். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்,’ எனக் கேட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.