
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது.
விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றார்.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தோவு செய்யப்பட்டார்.

சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வானது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது.
மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இன்று, தேசிய விருது பெற்றபோது, வெங்கய்ய நாயுடுவின் காலில் விழுந்து அவர் வணங்கினார்.
தன்னுடைய உரையில், கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார் குடியரசு துணைத் தலைவா்.

தேசிய விருதுகளை குடியரசுத் தலைவா் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை அளித்துள்ளார்.
விருதுகளை பெற்றவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேநீா் விருந்து அளிக்கவுள்ளார் கடந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ராஜ்யவா்தன் சிங் ராத்தோர் ஆகியோரும், இரண்டாவது கட்டமாக ராம்நாத் கோவிந்தும் வழங்கினர்.
A dream come true moment for @KeerthyOfficial in getting the prestigious #66thNationalFilmAwards presentation at Delhi for Best Actress category in Telugu (#Mahanati). Congratulations for the deserving lady????????????#KeerthySuresh #NationalAwards #Mahanati #MakkalSelviKeerthySuresh pic.twitter.com/iO9BMIK9gO
— PRO Kumaresan (@urkumaresanpro) December 23, 2019



